உருவம் இன்றி அலைந்து திரியும்
என்னுயிர் காற்றே …நீ …..
விரைந்திடும் வழியில்
புரிந்திடும் திருவிளையாடல் கோடி

பார்வை இன்றி
என் திசை அறிந்து
பாய்ந்து வருகிறாய்
பாசம் கொண்ட தலைவன் போல
பாசாங்கு செய்கிறாய்….

கால்கள் இன்றி
கடக்கும் பாதையில்
காவல் நிற்கிறாய்
காதல் கொண்ட தலைவனாய்
கவிதை சொல்கிறாய்……

கைகள் இன்றி
கன்னம் வைத்து களவு செய்கிறாய்
கள்ளம் கொண்ட காதலனின்
கைவிரல் போல
களைந்த என் ஆடையினில்
வேவு பார்க்கிறாய்…….

ஆவல் கொண்டு
உன்னைப் பற்ற கைகள் நீட்டினேன்
தேடல் கண்டு மகிழ
மறைந்து அரூபமாகிறாய்

ஊடல் கொள்ள எண்ணி
என்னை உரசிப் பார்க்கிறாய்
நாடல் கொண்ட
நங்கை மனம் நயந்து போகாமல்
பாடல் கொள்ளும் தலைவனாய்
பக்கம் வந்திடு……..


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *