திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம்

நான் உனக்காக மாறிவிட
நிறைய இருக்கின்றன

நீயும் எனக்காக மாறிக்கொள்ள
கொஞ்சம் இருக்கிறது

ஆனால்
நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்
கவனம் கொள்வோம்

மற்றவை மாறிடினும்
மாறாவிடினும் என்ன?

நீ பாதி நான் பாதி என்பதில்
உனக்கு நம்பிக்கை உண்டா?

நீயும் முழுமை
நானும் முழுமை
என்பதே சரி
அதற்கு மாறிக் கொள்வோம்

  • செந்தூரான்

============================

சுயமரியாதை

என்னிடத்திலான உன்
எதிர்பார்ப்புகளெவையும்
நமுத்துப் போகாதவரைக்கும்
உனதன்பைத் தருவதில்
தயக்கமேதுமில்லை உனக்கு

உன் அன்றாடத் தேவைகளெதுவும்
எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்
உனதன்பைத் தருவதில்
தயக்கமேதுமில்லை உனக்கு

என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்து
உன் சுயத்துக்காய் நான்
ஒடுங்கியிருக்கும் வரைக்கும்
உனதன்பைத் தருவதில்
தயக்கமேதுமில்லை உனக்கு

உன் நினைவின் பின்னோடே
என் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்
உனதன்பைத் தருவதில்
தயக்கமேதுமில்லை உனக்கு

அடுப்பங்கறை தாண்டி
என் சிந்தைகளுக்குச்
சிறகு முளைக்காதவரைக்கும்
உனதன்பைத் தருவதில்
தயக்கமேதுமில்லை உனக்கு

கிள்ளியெடுக்கும் பூவில்
வழியும் வலி யாரறிவார்?!

முனை மழுங்கிப்போன என்
சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்
முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தை
வேரோடு பொசுக்கிவிட்டால்
உனதன்போடு பின்னிக்கொள்வதில்
எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை
எனக்கும்

  • அன்பு மணிவேல்

Comments (3)


சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

அருமை!

சுயமரியாதை கவிதை யதார்த்தம்!👍👏👏

சமத்துவம் கவிதை need of the hour!

Sunitha Manikandan
Sunitha Manikandan
June 15, 2023

அன்புமணிவேலின் சுயமரியாதைக்கவிதை அட்டகாசம்

ம. செம. மோகன் ராஜா
ம. செம. மோகன் ராஜா
June 15, 2023

கிள்ளியெடுக்கும் பூவில்
வழியும் வலி யாரறிவார்?!///

அருமையான வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *