கடிதங்களுக்கு உயிர் இருந்தது
கவிதை
கையால் எழுதப்பட்ட
கடிதங்கள்
காலமாற்றத்தில் கரைந்துவிட்ட
காவியங்கள்
சகல விஷயங்களும்
அஞ்சல் அட்டையிலேயே
எழுதப்பட்டன
சங்கேதக் குறியீடுகள்
தேவைப்படவில்லை
மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்தே
கடிதங்கள் எழுதப்பட்டன
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்
உள்பெட்டியில்
சொல்ல வேண்டியிருக்கவில்லை
மாடு கன்று போட்டது முதல்
மாடி வீடு விற்கிற வரை
மனம் திறந்து
பரிமாறிக்கொள்ளப்பட்டது
தனிப்பட்ட விவகாரம் என்று
எதுவும் இருக்கவில்லை
ஒருவர் சத்தம் போட்டு வாசிக்க
ஊரே கூடிக் கேட்டது
கடவுச்சொல் போட்டும்கூட
அடுத்தவரிடம் கொடுக்கத் தயங்கும்
அலைபேசி அப்போது
அறிமுகம் ஆகியிருக்கவில்லை
மைதாப் பசை ஒட்டிய
இன்லாண்ட் கவருக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருந்தது காதல்
வருடக் கணக்கில்கூட
கடிதத்துக்காக மட்டுமல்ல
காதலுக்காகவும் காத்திருந்தனர்
பிக் அப்பும் பிரேக் அப்பும்
அறிமுகமாகியிருக்கவில்லை
நாய்க்குட்டி முதல்
கோழிக்குஞ்சு வரைக்கும்
குசலம் விசாரிக்கும்
நேசம் இருந்தது
குடும்பத்தினரிடம் பேசக்கூட
அப்பாயிண்ட்மெண்ட்
கேட்கவேண்டியிருக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொலைந்து போகாத இதயங்கள்
இணைந்தே இருந்தன
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சென்றுவிடவில்லை
உடலின் தேவைகளை விடவும்
மனத்தின் தேவைகள்
முக்கியமாய் இருந்தன
இணையவழி இணை தேடல்
இல்லவே இல்லை
கோபங்களைக் கொட்டித் தீர்த்திட்டபோதும்
மன்னிப்புக் கடிதங்கள் எழுத
மனம் இருந்தது
எந்தக் கடிதமுமே
பிளாக் செய்யப்படவில்லை
அன்பும் அக்கறையும்
குழைத்து எழுதி
உணர்வைச் சுமந்து வந்த
கடிதங்களுக்கு
உயிர் இருந்தது
AI தொழில்நுட்பத்தில்
தேவையான கடிதத்தை
ஆர்டர் செய்து
பெற்றுக்கொள்ளலாமாம்
உணர்வற்ற
வார்த்தை ஜாலங்களே போதுமோ
5G யுக மனிதர்களுக்கு?
கடிதம் எழுதும்
பழக்கம் மட்டுமல்ல
கடிதங்களுமே
வழக்கொழிந்துபோய்விட்டன
கூகுளிட்டுப் பார்த்தாலும்
அடுத்த தலைமுறைக்குக் காண்பிக்க
அகப்படவில்லை எதுவும்
என்றேனும் ஒரு நாள்
கண்ணில் படலாம்
யாரும் அறியாமல்
யாரேனும் ஒருவர் பத்திரப்படுத்திய
கடிதங்களில் ஒன்றேனும்
- அ. ஈடித் ரேனா

S MURALI
September 3, 2023சிறப்பான பதிவு சகோதரி…
அன்பும் அக்கறையும்
குழைத்து எழுதி
உணர்வைச் சுமந்த நம் கால கடிதங்களுக்கு
உயிர் இருந்தது…
அப்பா மகனுக்கு..
அம்மா மகளுக்கு..
அண்ணன் தங்கைக்கு..
தனிமையறியா வண்ணம்
கடிதம் மூலம்
உறவுகளை
தொலைவிலிருந்தாலும்
தொட்டுப் பார்த்தன
நம் மனதை…
மயிலிறகால்
மனதை வருடிய
பாசம், நேசம்,
அக்கறை,
கனிவு, காதல்,
கண்டிப்பு, கறார்
என எத்தனை தடவை
வாசித்தாலும்
மனதை விட்டு
அகலா
அந்த நிலாக் காலத்தின்
நினைவை
மனதில் செதுக்கிய
மடல்கள்…
நம் விரல்கள்
அடுத்தவர்
கண்களுக்காய் மட்டும்
வடித்த
மடல்கள்
பார்ப்பதற்காக
மட்டுமல்ல உறவுகளே…
செயற்கை சிரிப்புகளின்றி
மனம் மனதோடு
பேசிய உயிர் மொழிகளே
கடிதங்களாய்…
S MURALI
September 3, 2023சிறப்பான பதிவு சகோதரி…
அன்பும் அக்கறையும்
குழைத்து எழுதி
உணர்வைச் சுமந்த
நம் கால கடிதங்களுக்கு
உயிர் இருந்தது…
அப்பா மகனுக்கு..
அம்மா மகளுக்கு..
அண்ணன் தங்கைக்கு..
தனிமையறியா வண்ணம்
கடிதம் மூலம்
உறவுகளை
தொலைவிலிருந்தாலும்
தொட்டுப் பார்த்தன
நம் மனதை…
மயிலிறகால்
மனதை வருடிய
பாசம், நேசம்,
அக்கறை,
கனிவு, காதல்,
கண்டிப்பு, கறார்
என எத்தனை தடவை
வாசித்தாலும்
மனதை விட்டு
அகலா
அந்த நிலாக் காலத்தின்
நினைவை
மனதில் செதுக்கிய
மடல்கள்…
நம் விரல்கள்
அடுத்தவர்
கண்களுக்காய் மட்டும்
வடித்த
மடல்கள்
பார்ப்பதற்காக
மட்டுமல்ல உறவுகளே…
செயற்கை சிரிப்புகளின்றி
மனம் மனதோடு
பேசிய உயிர் மொழிகளே
கடிதங்களாய்…
GOMATHI SANKAR RAMANATHAN
September 3, 2023சபாஷ்.. அருமை.. அதோடு கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டு எடுப்போமே
ம. செ. மோகன் ராஜா
September 3, 2023அருமை
SUVAKIN SUGANANTHAN
September 6, 2023Super
Revanth
November 1, 2023சிறப்பு