”எந்த முதல்வரும் செய்யாததைச் சாதித்த எடப்பாடியார்!”

ஒட்டு மொத்தக் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் நன்கு அறிமுகமானவர் டாக்டர் தானூர் சண்முகம். இம்மாவட்டத்தின் பெருமாள் ஏரி நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் சண்முகம், அம்மாவட்ட விவசாயிகளுக்காக, தனி மனிதராக அவர் மட்டுமின்றி, தான் சார்ந்த சங்கத்தின் மூலமாகவும் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைத்து தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். அவற்றுள் மிக முக்கியமானது அவர் முன்னெடுத்த “அரிவாள் மூக்கு” திட்டமாகும். இது குறித்து அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

எங்கள் கடலூர் மாவட்டம் ஆண்டுதோறும், மழையாலும், வெள்ளத்தாலும், புயலாலும் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாகும். இப்படிப்பட்ட பருவ காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க எங்கள் முன்னோர்களும், அவர்களைத் தொடர்ந்து எங்கள் சங்கமும், கடந்த நூறு ஆண்டு காலமாக “அரிவாள் மூக்கு திட்டம்” எனும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தோம். கடலூரில் பாயும் கெடிலம் நதி மற்றும் பரவணாறு ஆகியவற்றின் வெள்ள நீரானது, ஒரே முகத்துவாரத்தின் மூலம் கடலுக்குச் சென்று வடிவகிறது. இதைத்  தனித்தனியாகப் பிரித்து முகத்துவாரம் ஏற்படுத்தும் வழிமுறையே “அரிவாள் மூக்கு திட்டம்” ஆகும். இந்தத் திட்டம் எங்கள் பகுதியில் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் உயிரையும், உடமைகளையும், வெள்ளப் பேரழிவிலிருந்து காக்கும் திட்டமாகும்.

கடந்த நூறு ஆண்டு காலமாகக் கிடப்பில் கிடந்த இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, விவசாயிகளின் மேல் அக்கறைக்கொண்ட, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 2019-2020ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் மூலம் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட் டுள்ளார். அதற்குக் கடலூர் மாவட்ட மக்களா கிய நாங்கள் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளோம். மேலும் இதற்குப் பக்கபலமாக இருந்த துணை முதல்வருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும், இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எங்களது இதயப் பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்கிக் கொள்கின்றோம்.

அதுமட்டுமின்றி, முதல்வர் அறிவித்த அரசாணை எண்.50 மூலம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றார்கள். கடந்த ஆண்டு மட்டும், எங்கள் பெருமாள் ஏரியிலிருந்து நான்கரை லட்சம் கியூபிக் மீட்டர் அளவிற்கு லாரிகள் மூலம் வண்டல் மண் எடுக்கப்பட்டது. இதற்காகவும் முதல்வருக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் தற்போது லாரிகள் மூலம் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்காததால், டிராக்டர் மூலம் மிகச்சொற்ப அளவிலேயே மண் எடுக்க முடிகிறது. எனவே ஏற்கனவே லாரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி கொடுத்ததைப் போல், மீண்டும் முதல்வர் கருணை கூர்ந்து உத்தரவிட்டால், வரும் காலங்களில் அதிக அளவில் தூர் வாரப்பட்டு, ஏரியானது அதிக அளவில் ஆழப்படுத்தப்படும் வாய்ப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி, லாரியில் வண்டல் மண் எடுப்பதற்கு ஆகும் செலவைப்போல் இரண்டு மடங்கு டிராக்டரில் மண் எடுப்பதற்கு செலவாகின்றது. இது விவசாயிகளுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் மண் எடுப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல்வர் இதற்கும் ஒரு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  மேலும் குடி மராமத்துப் பணிகள் மூலம் முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து 2018 மற்றும் 2019 என இரண்டு ஆண்டுகளில் பெருமாள் ஏரியில் உள்ள 11 பாசன வாய்க்கால்களும், சில வடிகால் வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டதோடு ஒன்பது புதிய மதகுகளும் கட்டப்பட்டுள்ளது. இதனால் கடலூர் பகுதி விவசாயிகளுக்குப் பெரும்பலன் கிட்டியுள்ளது.

மேலும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தின் மூலமாக இறைக்கப்பட்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெருமாள் ஏரிக்கும் வாலாஜா ஏரிக்கும் கிடைத்துவரும் தண்ணீரானது, வீராணம் ஏரியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும்போது மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மூலம் சென்னைக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது. பெருமாள் ஏரியையும், வாலாஜா ஏரியையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு ஆழப்படுத்தினால், N.L.C. மூலம் வெளியேற்றப்படும் நீரை முழுமையாக சென்னை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லலாம். இதனையும் முதல்வர் செய்து கொடுப்பார் என நம்புகின்றோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பெருமாள் ஏரியையும், வாலாஜா ஏரியையும் தூர்வார 178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடியார் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி எங்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது.  இந்த அரசாணை செயல்படுத்தப்பட்டால் ஏறக்குறைய 20,000 ஏக்கர் நிலங்களானது இரண்டு போகம் அறுவடை செய்யும் அளவுக்குப் பாசன வசதி பெறும். மேலும் அரசின் இந்த ஆணையால் 44,000 ஏக்கர் பாசனமுள்ள வீராணம் ஏரியை நம்பியுள்ள பாசனதாரர்கள், அறுவடைக் காலத்தில் தண்ணீர் இன்றித் தவிக்கும் நிலையும் மாறிவிடுவதோடு விவசாயத்தையே நம்பியுள்ள அவர்களின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும். இதனால் லட்சோபலட்சம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வது உறுதி. இதன் மூலம் சென்னை மக்களின் தண்ணீர்ப் பஞ்சமும் தீர்வுக்கு வரும்.

அதுமட்டுமின்றி N.L.C. யிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் என்பது ஜீவநதிக்கு ஒப்பானது என்றே கூறலாம். நொடிக்கு நூற்று ஐம்பது கன அடிக்குக் குறையாமல் தினமும் அவர்கள் நீரை வெளியேற்றிக் கொண்டிருக் கிறார்கள். தண்ணீர் இறைக்கும் இடத்தில் சிறிய அளவில் ஏரியைப் போல் அமைத்து, மெட்ரோ வாட்டர் பம்புகளை அங்கேயே அமைத்து அதிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத் திற்குக் குழாய் அமைத்து, அதை சென்னைக்குக் குடிநீர் எடுத்துச்செல்லும் வீராணம் இணைப்பில் சேர்த்து N.L.C தண்ணீரையும் கொண்டு செல்ல முடியும்.  மேற்கண்ட எங்கள் இரண்டு ஏரிகளுக்கும் மேட்டூரிலிருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆங்கிலேயர்களால் போடப்பட்ட அரசாணை இன்றும் உள்ளது. ஆனாலும் மேட்டூர் தண்ணீர் கிடைக்க வழி இல்லாததால்தான் நாங்கள் N.L.C நீரையும், மழை நீரையும் நம்பி விவசாயம் செய்து வருகின்றோம்.

ஆகவே “சுவடு” இதழ் மூலமாக தமிழக முதல்வரை தயவுகூர்ந்து கேட்டுக்கொள்வது என்னவென்றால், “தாங்கள் வெளியிட்டுள்ள அரசாணையின்படி நிதி ஒதுக்கீடு செய்ததோடு மட்டுமின்றி, உடனடியாக ஏரிகளைப் புணர மைக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும். அதன் மூலம் கடலூர் மாவட்டத்திலுள்ள பல லட்சக்கணக் கானவர்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, சென்னை மக்களின் தண்ணீர்ப் பிரச்சனைக்கும் முற்றுப்பள்ளி வைக்கமுடியும்”. ஆகவே, முதல்வர் அவர்கள் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி மற்றும் வீராணம் ஏரிப் பாசன விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர் களையும் வாழவைப்பார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு நன்றி கூறிக்கொள்கின்றோம்” என்றார் சண்முகம். அவரது கனவு  மெய்ப்பட நாமும் வாழ்த்துவோம்!


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *