தியானம்!
உன் முதல் சிரிப்பையும்
முதல் அழுகையையும் ரசித்த
முதல் ரசிகன் நான்!..
நித்தம் உந்தன் நினைவலையில்
நீர்த்துப் போனேன்
நிராயுதபாணியாய்!..
சங்குவலை கழுத்தில் சாய்ந்தாட
சஞ்சிகை அவதாரம் காண்பேனோ
சயனநிலையில்!..
அணிகளைந்து ஆடைகளைந்து நித்தம்
எஞ்சுவதை நோக்கி ஏங்கித்
திகைப்பேனா!..
கால்பிணைத்து கட்டியணைத்து காயம்
பேசிடும் ஆழ்மனதின் ஆர்ப்பரிக்கும்
உணர்வுகளை…
அள்ளியெடுத்து பொங்கும் அன்பின்
நுரைசொல்ல முடியா உணர்வுகளை
சொல்லிவிடத் துடிக்கும் தேகத்தின்
தியானம்!..
ஈருருளியில் நீண்ட பயணம்
மரமில்லா பொட்டல் சாலை
நிழலைத் தேடும் மரவியாபாரி!
Comments (0)