‘மல்’யுத்தம்
மல்லுகட்டி
மல்லுகட்டி
பதக்கம் வாங்கினார்கள்
தேசம் கொடி அசைத்துக்
குதூகலித்தது
பிரதமரோடு படம் எடுத்து
மகிழ்ந்துகொண்டார்கள்
மல்லுகட்டி
மல்லுகட்டி
கோரிக்கை வைத்தார்கள்
மல்லுகட்டி
மல்லுகட்டி
மறுக்கிறது அதிகாரம்
மல்லுகட்டி
வாங்கிவந்த பதக்கங்கள்
புறக்கணிப்போம் என்றாலும்
மல்லுகட்டிப் பார்க்கிறது
அதிகாரம்
பல்லைக்காட்டிச் சிரிக்கிறது
செங்கோல்
- செந்தூரான்
சுதர்சனம்.E.S
June 15, 2023பல்லு காட்டி சிரிக்கிறது செங்கோல்!
அருமை!