முறிக்கப்படும் கொம்புகள்

உங்கள் அன்பு எப்போதும்
நியாமானது உங்களுக்கு

வீட்டுத்திரையில் பார்த்து
நேரில் காண விரும்பி
என் வீடு தேடி வருவீர்கள்

இன்னும் அருகில் அருகில் பார்த்தாலும்
உங்களுக்கு அலுப்புத் தட்டாது

கூடாரம் அமைப்பீர்கள்

ஒரே கூடாரம் உங்களுக்கு
எப்போதுதான் போதும்?

ஒன்று நூறாகும்போது
போதும் என்று துதிக்கை உயர்த்துவேன்

ஆனால் உங்களுக்கு
என் துதிக்கை கீழ்ப்படிதல்தானே பிடிக்கும்

பயப்படாமல் என்னைப் புரிந்துகொள்ளலாம்
ஆனால்
அட்டகாசம் என்று செய்தித் தலைப்பிடுவீர்கள்

தீயிட்டும் வெடி வைத்தும் துரத்தும்போது
எனக்குக் கோபம் வராமல் இல்லை

நானும் உங்களோடு பழகியவன்தானே?

பின் திரும்பினால் என்னை விரட்டி
இன்னுமொருமுறை என் வீடு வரை
நீங்கள் வரக்கூடும்

இரண்டாம் முறை துதிக்கைக்கு நஞ்சேற்றி
நீங்கள் கற்பிக்கும் நியாங்களை
மறுக்கும் உரிமை கிடையாது எனக்கு

ஆனால் உங்கள் அன்பு
நியாமானது உங்களுக்கு

  • முத்து ஜெயா

Comment (1)


சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

Really felt painful!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *