கவிதை
நெஞ்சைத் திருகிய வலியை
சொல்லக்கூட நேரமில்லாது
நொடியில் முடிந்து போனான்
ஒரு தகப்பன்சாமி
அழுதழுது வற்றிப்போயிருந்தாள்
தாய்
அவள் மடிவிட்டு இறங்காது
அழுகைகளை வேடிக்கை செய்துகொண்டிருந்தன
சேய்களிரண்டு
அணைந்து போகாது
அழுகையைப் பற்றவைத்துக்கொண்டேயிருந்தது
கூட்டம்
அவனின் மிச்சமென
இனி இருக்கப்போகிறவர்களுக்காகத்
தொழுதுவிட்டு வந்தேன்
நான்
அப்போதைக்கு
அவரவர்க்கு
முடிந்தது
- அன்பு மணிவேல்

Comments (0)