பள்ளிக் கல்வியில் வைதீகத்தின் கூறுகள்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து குறித்து AISEC கலந்துரையாடல்

பள்ளிக்கல்வியில் பஞ்ச கோஷா விகாஸ் என்ற பிற்போக்கு சிந்தனை சார்ந்த கருத்து நுழைக்கப்படுவதை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த curriculam frame work இல் மதம் எவ்வாறு கோலோச்சுக்கிறது என்பதைப் பேராசிரியர் யோகராஜன் தொடர்ந்து விளக்குகிறார்.

The Panchakosha concept and imagination also maps into the different domains of development envisaged in ECCE which are the basis of the Curricular Goals.

இந்த பஞ்ச கோஷா கோட்பாடும் கற்பனைத் திறனும்தான் curricular goals  இல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகின்றனர். தயவுசெய்து இந்த curricular  goals என்ற வார்த்தையை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாமே இதற்கான விளக்கங்கள் (Substantiation). மேலும் அவர்கள் கூறுவது என்னவென்றால், Physical development (sharirik vikas) சரீரம் என்றால் உடம்பு, விகாஷ் என்றால் வளர்ச்சி, development of Life energy (Pranik Vikas), இதெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். Emotional / mental development (Manasik Vikas), Intellectual drelopment (Bauddhikvikas) Spritual development (chaitsik Vikas) ஆனந்தமய கோஷா இருக்கிறதே, அதனுடைய நீட்சிகளே இவை. எல்லாமே சமஸ்கிருத வார்த்தைகள்.

இப்படித்தான் அனைத்தையும் இந்த frame work இல் விவரிக்கின்றனர். வைதீகத்தில் இரு முக்கியமான கூறுகள் இருக்கும். ஒன்று ஸ்ருதி, மற்றொன்று ஸ்மிருதி. விவேகானந்தரின் எழுத்துகளை எடுத்து வாசித்தால்கூட, அவர் சொல்வது ஸ்ருதி, ஸ்மிருதியில் ஸ்ருதியைத்தான் அடிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார். ஸ்மிருதியை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது; கொள்ளவும் முடியாது, ஏனெனில் அது வெறுமனே ஒருவருடைய நினைவிலிருந்து மற்றொருவருக்கு வாய்மொழியாகக் கடத்தப்படுவது. அதனால் அதன் உண்மைத்தன்மையை யாரும் பார்க்க முடியாது. ஆய்வு செய்வதானால் ஸ்ருதியை மையமாக வைத்துதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்கிறார் விவேகானந்தர்.                          

கல்வி கற்கக்கூடிய குழந்தைகளுக்கு ஞாபக சக்தி – நினைவாற்றல் மிக  முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். அதை நாம் எடுத்துக் கூற வேண்டுமானால் நினைவாற்றல் குறித்து நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றும் மிக அழகாக விவரிக்கலாம். ஆனால் அப்படிக் கூறாமல், The ancient Indian emphasis on Smirithi என்கின்றனர். எல்லா இடத்திலேயும் ancient என்ற சொல்லைப் பார்க்க முடிகிறது. 

Since Vedic era, the ancient Indian holistic natural Indian natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices…

இதற்கு முன்பு வரை இதுபோன்ற பேச்சுகளை நவீன அறிவியலையும்  பண்டைய இதிகாசங்களையும் இணைக்கும் விஷங்களை அரசியல் தலைவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்தனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இங்கு  பாடங்களில் பேசுகின்றனர். ஏற்கனவே அறிவியல் குறித்து மிக ஆழமாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், அறிவியலின் ஒரு பிரிவான இயற்பியல் துறையை ரோமானிய இயற்பியல், கிரேக்க இயற்பியல், தமிழக இயற்பியல், இந்திய இயற்பியல், அமெரிக்க இயற்பியல் என்று யாரும் பிரிக்க முடியுமா? பிரிக்க மாட்டோம். ஏன் பிரிப்பதில்லை?

ஏனெனில்  இயற்பியல் என்பது அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு துறை, அங்கு பொதுவாக பொருட்களின்  இயக்கத்தின் விதிகள் குறித்துப் படிக்கிறோம். உலகம் முழுமைக்கும் அந்த விதிகள் பொதுவானவை. அவர்கள் கூறுவதை அவ்வாறே பாருங்கள்.

Since the Vedic era, the ancient Indian holistic natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices, with one of its eight branches dedicated to the care of children. The approach to knowledge and understanding of childcare in Ayurvedic texts was holistic. The biological, psychological, sociological, and cultural approaches were seen as mutually inclusive. In the contemporary practice of Ayurveda, Kaumarabhrithya, the first section of the Kashyapa Samhita, is often consulted for the practice of paediatrics, gynaecology, and obstetrics. It is reported to have been written in the 6th century BCE.

உலகத்தில் விவசாயம் தோன்றி 20,000 வருடங்கள் ஆயிற்று. ஆகவே இருபதாயிரம் வருடங்களாக உலகில் நாகரிகம் உருவாகியுள்ளது. இப்படி நீண்ட காலமாக வளர்ந்ததால் பல இடங்களில் பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன என்பது உண்மைதான். இப்படி மருத்துவ முறைகள் தோன்றியிருந்தாலும், வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து உண்மையிலேயே அறிவியல் எல்லாம் சரியாக இணைக்கப்பட்டிருந்தால் எப்படி மாறியிருக்க வேண்டும் எனில், “மருத்துவ அறிவியல்” என்று மாறியிருக்க வேண்டும்.

அதாவது, ஆயுர்வேதம் என்பது இல்லை, யுனானி என்பது இல்லை, ஆங்கில மருத்துவம் என்பது இல்லை, சித்தா என்பது இல்லை, ஹோமியோபதி என்பது இல்லை. அனைத்தும் இணைந்து “மருத்துவ அறிவியல்” – யுனிவெர்சல் மெடிக்கல் சயின்ஸ் என்று மாறியிருக்க வேண்டும் என்பது அறிவியல் பார்வை கொண்ட எல்லாருக்கும் தெரியும்.

இன்னும்  அறிவியலால் அப்படி இணைக்க முடியாததால், அவையெல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றின் கருத்துகள், கொள்கைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். இதெல்லாம் ஆய்வு செய்து அறிவியல் முறைக்குக் கீழ் வந்துவிட்டால் எல்லாமே மருத்துவமுறையாக மாறிவிடும். அதன்பிறகு அது சித்தாவாகவோ, யுனானியாகவோ ஆயுர்வேதமாகவோ இருக்காது.

 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத அறிவானது மிக உயர்ந்த அறிவு. ஆனால் இன்று இருக்கக்கூடிய நவீன அறிவியலில் இந்த அறிவை மிக உயர்ந்த அறிவு என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் இதையும் NCF வடிவமைப்பில் curicular  goal ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். 

Samskaras (சம்ஸ்காராஷ்) என்ற சொல் இதில் பல இடங்களில் வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளில் வருகிறது. இதன் பொருளை பொதுவாக நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், Disposition, attainment of  values, அப்படின்ற பொருளில் வரக்கூடிய வார்த்தைகள் என்ன மாதிரியான attainment? உதாரணமாக, பிள்ளை  பால் குடிப்பருவம் முடித்துவிட்டது, திட உணவு உண்ணும் பருவம் வந்துவிட்டது, அதற்குப் பண்டை காலத்தில் என்ன பெயர் என்றால் அன்னப் பிரசன்னா (Annaprashana). இன்றிலிருந்து பிள்ளைக்குப் பருப்பு சோறு தரப் போறோம். அதுபோல, பிள்ளையின்  விரல்கள்  ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வலிமையுடையதாக ஆகிவிட்டது. அதன் சிந்தனைகள் கேள்விகள் கேட்கும் அளவு வளர்ந்துவிட்டது. அவர்களுக்கு எழுத்து பழக்க வேண்டும். இது ஒரு சம்ஸ்காரா, இதை vidyarambha  அல்லது Aksharabhyasa என்கின்றனர். இப்படி எல்லா இடங்களிலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் இருக்கின்றன. இவற்றை எல்லாம்  NCF-க்குள் கொண்டு வருகிறார்கள். இதைப் பெருமை என்று கூறுகின்றனர். 

மேலும், முழுமையான ஆண் மகன் அல்லது மனிதன் என்றால் pursuit of the four Purusharthas , Dharma – நியாயம்  Artha  – பணம் (Wealth)  Kama (Pleasure) மகிழ்ச்சி and Moksha. (Salvation), இந்த சம்ஸ்காராக்களை நோக்கிக் குழந்தைகள் பயணம் பண்ணக்கூடிய வகையில் இந்த NCF வடிமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

இத்தோடு நின்றுவிடவில்லை.

இந்தியாவில் கல்வியின் அடையாளமாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்றும் கூறும்போது உண்மையிலேயே  சாவித்ரி பாய் பூலே, ஜோதிராவ் பூலே குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். நாமும் குறிப்பிடுவோம். ஆனால் எதார்த்த இந்தியாவில் கல்விக்கான முன்னோடி என்றால் ஈஸ்வர சந்திர வித்யாசாகரைத் சொல்வோம். ஏனென்றால் வங்கத்தில் தெருவில் நின்று பிச்சை எடுக்காதது மட்டும்தான் குறை, அப்படியான வழிவகைகளில்  பணியாற்றி, எண்ணற்ற பள்ளிகளைத் திறந்தது அவர்தான். அதன் காரணமாகத் தான் வங்கம் முதலில் கண்ணைத் திறந்தது. அதனால்தான் வங்கத்தை உடைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் நினைத்தனர். இந்திய  மறுமலர்ச்சியின் தந்தை  ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஆனால் அவரை இங்கு குறிப்பிடவில்லை.  அவருக்குப் பின் வந்த பூலே தம்பதியினரைச் சேர்த்துள்ளனர். அவர்களிருவரும் மிகப் பெரிய ஆளுமைகள்தான். அவர்களுடன் ரபீந்தரநாத் தாகூரைச் சேர்த்துள்ளனர். அவரையும் சிந்தனையாளர் என்று ஏற்று இருக்கிறது இந்த NCF. மற்றும் சுவாமி விவேகானந்தரையும் குறிப்பிடுகின்றனர்.

சுவாமி விவேகானந்தர் கல்வி குறித்து ஏராளமானவற்றைக் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் எதைச் சேர்த்திருக்கிறார்கள் என்றால், Is the empirical world all that we need to know? Is this all that we are? Should the improvement of material aspects of human existence all that we need to strive for? For him, the core of human existence and human possibilities lies in atman (the self)..

atman. (the self)…என்பதன்  உண்மையான அர்த்தம் ஆன்மா என்று சொல்லலாம். எத்தனையோ விஷயங்களை அற்புதமாகப் பேசியிருக்கிறார் விவேகானந்தர். ஆனால் அவர் கூறிய இந்தக் கூற்றை மட்டுமே இங்கு இவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

அடுத்து மகாத்மா காந்தியடிகள்.  நாமும் அவரை ஏற்றுக்கொள்ளலாம். அடுத்து அரபிந்தோ, அவரது புரட்சிகர ஆரம்ப கால வாழ்க்கையைப் புகழ்வோம். ஆனால் கல்வி குறித்து அவரது கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்தவொரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடும் விழிப்புணர்வுள்ள மக்களும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அடுத்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரையும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். 

இவர்கள் எல்லாரும் கல்வியில் முக்கியப் பங்காற்றி இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தவிர குறிப்பிடபபடும் வேறு இருவர், கிருபாஜி பதேகா மற்றும் தரபா மோடகி. இவர்கள் இருவரும் மராத்திய குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவரும்  சீர்திருத்தவாதிகள் .

அடுத்து Current State learning crisis குறித்துச் சொல்கின்றனர். பிரச்சனைகனைக் குறித்துப் பேசுபவர்கள், தீர்வுகளைச் சொல்லியிருப்பார்கள் என்று தேடினால் அதுபற்றி எதுவுமே இல்லை.

அடுத்து  சில புள்ளி விவரங்கள் தருகின்றனர். 11.7 இலட்சம் பள்ளிகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அவற்றில் 9.3 லட்சம்  தொடக்கப் பள்ளிகள், 1.9 இலட்சம்  முன்பருவப் பள்ளிகள்  (Pre Primary), 2.7 லட்சம் அங்கன்வாடிப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கன்வாடியும்  முன்பருவப் பள்ளிகளும் நிச்சயமாக நமக்குப் போதுமானதாக இருக்காது. அதைப்பற்றிக் கூறுகின்றனர்.  இதற்காக நிதி எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட Structure உருவாக்கப்போகிறோம்? இப்படிப்பட்ட விஷயங்களை எதிர்பார்த்தால், இதில் பதில் எதிர்பார்க்க முடியாது. இவற்றையெல்லாம், நாங்கள்  ஒழுங்குபடுத்தப்போகிறோம் (regulate)  என்கின்றனர். 

பின்பு, (Learning Outcomes) கற்றல் விளைவுகள் குறித்துப் பேசுகின்றனர். கற்றல் விளைவுகள் எப்படி இருக்கிறது? அங்கன்வாடிகளில் எப்படிப்பட்ட  ஆசிரியர்கள்  இருக்கின்றனர் ? அங்கு கல்விச் சூழல் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் குறிப்பிடுபவர்கள், இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்யப் போகிறோம்? ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ? எவ்வளவு நிதி ஆதாரத்தை உருவாக்கப்போகிறது? போன்ற ஆக்கப்பூர்வத் திட்டங்களைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தொகுத்துச் சொல்லுகின்ற எல்லா இடத்திலும் பண்டைய பெருமையே பேசப்படுகிறது. 

தொடர்ச்சி நாளை வெளியாகும்.

  • உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *