சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

நாடற்றவர்களா

இவர்கள்..?

இல்லை.

இந்த நாட்டின்

முதுகெலும்புகள்.

நாதியற்றவர்களா

இவர்கள்..?

இல்லை .

இந்த நாட்டின்

இரத்தமும் சதையுமானவர்கள்.

இவர்கள்

இல்லையேல்

உங்கள் இந்தியா ஏது.‌?

ஆனால்-

செருப்பாய் தேய்ந்து

இந்த தேசத்தின்

உயர்வுக்காக

உழைத்தவர்களை

தேய்ந்த செருப்பாய் எண்ணி

தெருவில் வீசி எறிந்து விட்டதே

இந்த அரசுகள் .

காரணமென்ன..? பெருமுதலாளிகளின்

எடுபிடிகளான அரசுகள்

இந்த

உழைக்கும் மக்களை

ஊர் கொண்டு போய்

சேர்த்தால்

கார்ப்பரேட்டுகளின்

கரன்சி பசிக்கு

பங்கம் வந்துவிடும் என்பதால்

காரணம் கூறாமல்

பல்லாயிரம் மைல்கள்

பட்டினியோடு நடக்க விட்டே கொல்கிறது.

என்னசெய்யலாம்..?

உயிரைக்

கையில் பிடித்தபடி ஓடும்

ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியும்

தானும் உரிமையுள்ள

ஒரு இந்தியக் குடிமகன்

என்பதை உணர்ந்து ,

செருப்பை கையில்

எடுத்தால்

உங்கள்

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..?


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *