தாயே தாதியோ? இதுவே நீதியோ?
கவிதை பெண்ணாய்ப் பிறத்தலே பெருமைமண்ணில் உரைப்பார் உண்மைஉண்மை நிலையோ காண்கில்உதிரம் உறையும் நெஞ்சில் பிறந்த போதினில் கள்ளிப்பால்அருந்தத் தருவார் அன்னையரேபருவம் மலரும் பாவையரைப்பருந்தாய் கொத்தியே சிதைப்பார் விரும்பா உறவாய் விளைந்திடும்கருவையும் சுமப்பார் கனிவுடனேவிதைத்தே எங்கோஓடி மறைந்தான்விதையேற்றே விரும்பி வளர்த்தாள் அப்பனில்லாப் பிள்ளை அழாதவாறேகையுழைத்துக் கனிந்து வளர்த்தாள்தன்மடி மெத்தையாக்கித் தாலாட்டியேதானுறங்காது கனவுகள் வளர்த்தாள் கல்வியில் சிறக்கக் கட்டெறும்பானாள்வாழ்வில் உயர்த்தத் தேய்பிறையானாள்தாயவள் தேய சேயவன் சிறந்தான்சீர்மிகு பட்டம் சிறந்திட உயர்ந்தான் தெய்வம் தானென்றறியாத் தாயவள்தெய்வம் தொழுதே நன்றி உரைத்தாள்முடிந்தது துயரென்று முகமலர்ந்தாள்சிறந்தது வாழ்வென அகமகிழ்ந்தாள் விதியவள் வாழ்வில் வேறு விளைத்ததுமகனவன் மனத்தில் சேறு விளைந்ததுமணந்தான் மாளிகை வாசம் வந்ததுகுணந்தான் கெட்டிட நாசம் புகுந்தது உச்சிமுகர்ந்து அள்ளி அணைத்த தாய்எட்டி உதைக்கத் துள்ளி விழுந்தனளேநான்பெத்த ராசா – ஈனமாய்க் குரலில்துடித்தாள் உதிரம் உதிர்த்தாள் மனத்தில் இதுதான் நான்பெத்த ராசாவா? ஊறியபாலெல்லாம் உதவாது போனதுவோமனத்தில் எண்ணங்கள் பலவிதமாயினும்நான்பெத்த ராசா நல்லா வாழட்டும் தாயுள்ளம் வாழ்த்தியது வலிகளில்இருக்கஇடம் தேடியது வீதிகளில்கையுழைத்துக் கஞ்சிவார்த்த கட்டுடல்நைந்ததுணியாகித் தள்ளாடும் ஊசலானது நொந்துடல் வெம்பி மனமதில் குறுகிதள்ளாடி வந்தாள் தன்மகன் வாசல்அழுகின்ற குழந்தைக்குத் தாதி தேவைஅணுகுங்கள் உள்ளே சம்பளம் ஆயிரம் கண்டாள் ஓர் அறிவிப்பு அட்டைதனைகுமுறினாள் காலத்தின் கோலத்தால்அழுகை மீறிட அடிமனத்தில் ஆயிரம்நினைவுகள் தாலாட்டத் தாதியோ நான்பெத்த ராசா நீயழப் பார்த்ததிலைபேரன் அழநான் பார்த்திருப்பேனோகையிலெடுத்து வளர்த்த மகன்முன்னேகையெடுத்து வணங்கித் தொழுதனளே எதற்காக மீண்டுவந்தாய் என்முன்னேதந்தையோ தாயோ எனக்கிலை போதாரையாய் வழிந்திடும் விழிகளில்தாயவள் இழைத்தாள் கெஞ்சலை நிந்தாய் இறந்தனள் நீ உதைத்தபோதேநின்முன் நிற்பவள் நின்சேய் தாதியேஅனுபவம் நிறைய உண்டு பிள்ளை வளர்ப்பினில்ஆசையாய் நான் வளர்த்த ராசா உலகிலுண்டு தாலாட்டுப் பாடிடுவேன் தளிர்ப்பிஞ்சைத் தாங்கிடுவேன்நீராட்டித் துடைத்திடுவேன் நெஞ்சினில் தாங்கிடுவேன்உறங்கிடக் கதை சொல்வேன் உறங்காது பார்த்திருப்பேன்நிலவினை நான்காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவேன் மார்பினில் உதைத்தாலும் மகிழ்வோடு ஏற்றிடுவேன்நான்பெத்த ராசாவாய்ப் பிள்ளைமுகம் பார்த்திருப்பேன்பாசத்திற்கு விலையில்லை பணம்காசு வேண்டாமய்யாதாயவள் இறந்துவிட்டாள் தாதியிவள் மண்டியிட்டாள்!