ஆறடி விந்தியம் காமராஜர்

எளிமைக்கு என்றும் இலக்கணமாம்போலித்தனமில்லா புகழ் ஜோதியாம்கல்லாமை ஒழிந்தாலே இல்லாமைபோகுமென உணர்ந்திட்ட உத்தமராம்தாய் நாட்டின் மண்வளர்த்த தூயபண்பாட்டை காத்திட்ட காவலராம் பதவிதனைத் தேடுவோர் மத்தியில்நாடிவந்த பதவிதனை நாடாதவரேஅதனால் கிங் மேக்கர் ஆனவரேசாதி மதம் பாராமல் இலவசக்கல்விகொடுத்த கல்விக் காவலரேகல்வி கற்கும் பிள்ளைகளின்வயிற்றுப் பாட்டுக்கு வழிவகுத்துமதிய உணவு தந்த வள்ளலே! வான் தந்த மழைதனைச் சேமிக்கவழிவகுத்த அணை வங்கியன்றோ!ஆலைகள் பலவமைத்து ஏழைகளின் வாழ்வுதனை சோலையாக்கியஆணைக் காவலரன்றோ!நாட்டின் வளர்ச்சிகென சாலைகளும்பாலங்களும் அமைத்த நித்திலமன்றோ! மக்கள் வளம் காக்கும் மாக்களுக்கும் மருத்துவமனை அமைத்த மாசிலாமணியன்றோ!கண்ணில் அமைதி ஏந்தி சொல்லில்சுருங்கப் பேசி வீறுநடை போட்டவராக நதியன்றோ!ஒதுக்கப்பட்டோர் நிலை உயர அறநிலையத்துறை அமைச்சராய்கக்கனை அமர்த்தி அரசாண்ட விந்தியமன்றோ!கன்னியொருத்தி கரம்பிடித்துநீ வாழ கண்துயர்க் கொண்டுஅழுதாளோ உன் அன்னையன்றுஎன் நாட்டு மக்கள் நிலை உயராமல் வேண்டாம் மணமென்று மறுத்ததால் பேசப்பட்டீரோஅயல் நாட்டிலும் அன்றுஅத்தத்துவத்தின் அறவழிதான்உன்னைப் பார் முழுதும் போற்றுதய்யா!நாடு முழுதும் நல்விழா உமக்கெடுத்துஇன்றும் உம்மை வணங்குதய்யா…! ஆக்கம்: பாரியன்பன் நாகராஜன்