மனிதத் தொழிற்சாலைகள்
மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை நாம் அதே நீச்சலுடை அணிந்தோம்ஆனால் இப்போதுநம் கனவு தரிசனங்களின் குவிப்பில்சிறு விலகல் நடந்துள்ளது தோட்டத்து மண்நரியின் கால்தடம் பதிந்ததைப் போலதொடுவதற்கு சூடாக இருக்கிறது எங்கள் நடுத்தர நகரத்தை நான் பின்தொடர்ந்தேன்ஒரு வால்கிரீன்ஸில் நம் பாதை பிளவுபட்டபோதுவிக்டோரியன் துப்பறியும் நபரைப் போலகிரினோலின் ஆடையுடனும் குழைந்த இன் சொற்களுடனும்என் அடிச்சுவடுகளை நான் திரும்பப் பெற்றுக்கொண்டேன் ஆனால் இதோ, சகோதரி டுமல்ட்,நிழல்கள் என் பருத்த கைகளில் இறங்குகின்றனஎன் மார்பகங்களை இழுத்த குழந்தைகளைநான் நினைவில் வைத்திருக்கிறேன் எங்கள் வியர்வையும் பாலும்கலந்தே இருக்கின்றன