ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போலஇந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன் ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்சாம்பலின் நிறத்தில்எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையைமேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய் சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்தூரத்து மண் வாசமும்கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய் பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கிஒப்பாரி வைக்கும்ரேடியோ பெட்டியைப்போலகேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன் அனுமானங்களை என்னுள் நிரப்பிவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய் முதிர்கன்னியின் மரணத்திற்குவயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்பிணத்தைப் போலநடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறதுமரணத்திற்கான சிறு ஓலம். பவித்ரா பாண்டியராஜு